திருச்செந்தூர் நகராட்சியை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கு பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 December 2022

திருச்செந்தூர் நகராட்சியை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கு பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக மாணவர் இயக்கம்  நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க  காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சி ஐ டி யு,போன்ற கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலைய சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தியும் முறையான பாதாள சாக்கடை அமைத்திடவும்  அனைத்து பகுதிகளுக்கும்  சீரான குடிநீர் வழங்க வேண்டும், மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் ஏற்படுத்தவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தலைமை தமிழக மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாநில பொருளாளர் திருப்பதி விஜி வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மாநில அமைப்பாளர் அஜித் குமார் மற்றும் மாநிலச் செயலாளர் ப.சி.சிவநேசன், முன்னிலை பாலசுப்பிரமணியன், பால் மணி, முத்துச்செல்வன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி கணபதி கார்கி சங்கத் தமிழன் விடுதலை சிறுத்தை கட்சி விடுதலைச் செழியன் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மற்றும் மற்றும் கடலோடிகள் அமைப்பு கனிட்ராஜ் கலாம் மன்றம் மணிவண்ணன் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழக மாணவர் இயக்க நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்கள்   பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad