டி.சவேரியார்புரத்தில் புதிய மீன் சந்தை. மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமாருக்கு மக்கள் பாராட்டு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 December 2022

டி.சவேரியார்புரத்தில் புதிய மீன் சந்தை. மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமாருக்கு மக்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவேரியார்புரத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி புதிய மீன் சந்தை கட்டும் பணியினை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி, புதிய மீன் சந்தையை அமைத்திட திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும்,
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான ஆர்.சரவணக்குமார் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 
இந்நிகழ்வில் கவுன்சிலர் தொம்மைசேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராணி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், தி.மு.க நிர்வாகிகள் ராயப்பன், பொன்னுச்சாமி, ராமச்சந்திரன், கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தங்களின் பகுதியில் புதிய மீன் சந்தை அமைத்திட முயற்சித்து அடிக்கல் நாட்டிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் , ஆர். சரவணக்குமாருக்கு டி.சவேரியார்புரம் பகுதி மீனவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
No comments:

Post a Comment

Post Top Ad