புதுக்கோட்டையில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்,விழிப்புணர்வு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 27 December 2022

புதுக்கோட்டையில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்,விழிப்புணர்வு

 மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மற்றும் 
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் RKVY RAFTAAR 2021 -22 சார்பில்
புதுக்கோட்டை ஆர். சி. மினி மஹாலில் நடைபெற்ற இலவச வெறி நோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமினை 
கால் நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன், தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கூட்டாம் புளி,அல்லிக்குளம் பேரூரணி, தெற்கு சிலுக்கும்பட்டி, மறவன் மடம், கோரம்பள்ளம், அய்யனடப்பு, முடிவைத்தானேந்தல், ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு மக்கள் சுமார் 300 செல்லப்பிராணிகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர்.
முகாமில் உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், நோய் புலனாய்வு பிரிவு உதவி மருத்துவர் பெரியசாமி,ஆய்வாளர் செல்வராணி பராமரிப்பு உதவியாளர்கள் சரஸ்வதி, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் ஆனந்த ராஜ் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad