கீழவைப்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 December 2022

கீழவைப்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி .எம். எம் கல்லூரி சார்பாக கீழவைப்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவி  மகேஸ்வரி விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் இயக்குனர் முனைவர்  கோபால்  மாணவ மாணவிகளுக்கான போட்டிகளை துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் கீழ வைப்பார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  வசந்தியினை கௌரவிக்கும் விதத்தில் பொன்னாடை அணிவித்தனர்.மகாகவி பாரதியாரின் பெருமைகளையும் விடுதலைக்காக அவர் செய்த தொண்டினையும் விளக்கும் விதத்தில் ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, மாறுவேட போட்டி, மௌன மொழி போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் பள்ளியின் முதல்வர் வசந்தி  வழங்கி பாராட்டினார். கல்லூரியின் வணிகவியல் துறை தலைவி சுதா நன்றி உரை வழங்க விழா நாட்டுப்பண்ணோடு இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் தலைமையில் ஆங்கிலத்துறை தலைவி செல்வி அழகுமணி மற்றும் அனைத்து பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad