சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மெகா இலவச மருத்துவ முகாம். கனிமொழி எம்.பி துவக்கிவைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 December 2022

சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மெகா இலவச மருத்துவ முகாம். கனிமொழி எம்.பி துவக்கிவைத்தார்

தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் சென்னை வடழனி ஃபோர்டிஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மெகா இலவச மருத்துவ முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கிவைத்தார்.அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி.கனிமொழி பேசுகையில்:
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்காக, ஃபோர்டிஸ் மருத்துவமனை சார்பில்  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மருத்துவ முகாமின் முக்கியத்துவம் கருதி  வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் சாலை மார்க்கமாக வந்து சரியான நேரத்தில் மருத்துவ முகாமை தொடங்கி நடத்திக்கொண்டுள்ளனர். இதற்காக ஃபோர்டிஸ் மருத்துவர்கள், நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதலமைச்சர் மக்களுடைய மருத்துவ சிகிச்சைகளுக்காக எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறார் என நமக்கு தெரியும். கொரோனா பாதிப்புகளை எப்படி சிறப்பாக அரசு எதிர்கொண்டு மக்களை பாதுகாத்தனர் என்பது தெரியும். இன்று மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் சிற்ப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்கொல்லாம் ஆரம்ப புள்ளியாக கலைஞரின் வருமுன் காப்போம் என்ற மகத்தான திட்டத்தஇன் கீழ் கிராமங்களுக்கு மருத்துவர்கள் வந்து மருத்துவ பரிசோதனை செய்தும் மேல் சிகிச்சையும் அளித்தனர். இந்த மருத்துவ முகாமில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக உயர் மருத்துவ சிகிச்சைகளையும், மக்களுக்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், அவசியமெனில் அறுவை சிகிச்சையும் இலவசமாக ஃபோர்டிஸ் மருத்துவமனை வழங்குகின்றது. மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையவேண்டும் என பேசினார். 
ஃபோர்டிஸ் மருத்துவமனை தலைவர் வெங்கட் ஃபனிதர் நெல்லூரி கூறுகையில்:
“தூத்துக்குடியில் வசிப்பவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்யும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்காக கனிமொழி கருணாநிதி எம்.பி க்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். இச்சிறப்பு முகாமின் போது உடல்நலக் குறைவால் கண்டறியப்பட்ட நோயாளிகள், தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (சிஎம்.சிசிஐஎஸ்) மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஃபோர்டிஸ்-இல், எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் குழு தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களைச் சென்றடைவதற்கும், அனைவருக்கும் தரமான சுகாதார வசதிகளை அணுகுவதற்கும் உறுதிபூண்டுள்ளனர். அண்டை சமூகங்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். இந்த முகாமின் நோக்கம், சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடிய பல்துறை மருத்துவர்களின் குழுவை அணுகுவதும், மேம்பட்ட சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும் என தெரிவித்தார்.

சிறப்பு சிகிச்சைகள்:
       இதயம், நுரையீரல், இரைப்பை குடல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, எலும்பியல், மகளிர் மருத்துவம், வலி மேலாண்மை போன்ற பல துறை டாக்டர்கள் குழு மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியது. மேலும் எக்கோ, அல்ட்ராசோனோகிராபி, எலக்ட்ரோ கார்டியோகிராம், நுரையீரல் செயல்பாடு சோதனைகள், ஃபைப்ரோ ஸ்கேன் மற்றும் எலும்பு தாது அடர்த்தி போன்ற பலதரப்பட்ட ஆய்வுகள் இலவசமாக வழங்கப்பட்டன. மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, நோயாளிகளின் உடல்நிலையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், ஆர்.எம்.ஓ சைலஸ் ஜெபமணி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ், ஆனந்த் கேபிரியல் மற்றும் மருத்துவரணி அமைப்பாளர் அருண் குமார், ஆதிநகு பால்ராஜ், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைவர் வெங்கட்ஃபனிதர் நெல்லூரி வரவேற்புரை ஆற்றினார் மற்றும் ஃபோர்டிஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர்  வீரபிரகாஷ் நன்றியுரை வழங்கினார்.




No comments:

Post a Comment

Post Top Ad