பி.எம்.கிசான் பயனாளிகள் 15.12.2022க்குள் ekyc ஆதார் எண் உறுதி செய்ய அறிவுறுத்தல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 December 2022

பி.எம்.கிசான் பயனாளிகள் 15.12.2022க்குள் ekyc ஆதார் எண் உறுதி செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்  
ஜெ.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிப்பதாவது தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. 
தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம் 
நடப்பாண்டில் 13வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை 
பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. 

 ஆதார் எண்ணை உறுதி செய்ய வழிமுறைகள் :
பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்களாகவே ஆதார் எண்ணை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். 

உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி. எம். கிசான் இணையதளத்தில்  ekyc செய்ய வேண்டுமாறு கோரும் நிலையில் 
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை 
(one time pass word) பி.எம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். 

உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி https://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் ekyc எனும் பக்கத்திற்குச் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். 

எனவே பி எம் கிசான் தவணைத்தொகை
பெரும் பயனாளிகள் இது நாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் 
பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை 15.12.2022க்குள் உறுதி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இது தொடர்பான கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால் புதுக்கோட்டை வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நமது தூத்துக்குடி வட்டாரத்தில் இன்னும் 1300 பயனாளிகள்/ விவசாயிகள் ekyc செய்ய வேண்டி இருப்பதால் உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரைத் தொடர்பு கொண்டு தங்களது பெயர் ekyc செய்ய வேண்டியவர்கள் பட்டியலில் உள்ளதா என்று விவரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad