5 கோடி நிதியில் பாரம்பரிய தொழிலுக்கு புத்துயிர். வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கோட்ட உதவி இயக்குனர் தகவல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 December 2022

5 கோடி நிதியில் பாரம்பரிய தொழிலுக்கு புத்துயிர். வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கோட்ட உதவி இயக்குனர் தகவல்

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொமடி கோட்டை, விசுவாசபுரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருமண மண்டபத்தில் மத்திய அரசின்  குறு, சிறு  மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு  உருவாக்கும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு கதர் மற்றும் கிராம   தொழில்கள் ஆணையத்தின் மதுரை உதவி  கோட்ட இயக்குனர் டி.வி.அன்புச் செழியன் தலைமை தாங்கி திட்டங்கள் பற்றி விளக்கி பேசுகையில்"கதர் கிராம தொழில்கள் ஆணையத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவணங்கள், பயனாளிகள் தேர்வு, திட்ட அனுமதி ,தொழில் முனைவோர் பயிற்சி, பயனாளியின் பங்கு, வங்கியின் பங்கு, மானிய விவரங்கள் பற்றியும் மேலும் பாரம்பரிய கைத்தொழிலை மேம்படுத்தி, புத்தியிர் அளிப்பதற்காக. அதிகபட்சமாக  5 கோடி வரை  நிதி வழங்கும் திட்டம் உள்ளது என கூறினார்.மேலும் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சப்பை மற்றும் கடனுதவி, மானியம் சம்பந்தமான விழிப்புணர்வு  கையேடுகளையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் அகிலா, அலுவலர்  பேச்சியப்பன்,  குறு,சிறு  மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவன உதவி இயக்குனர் ஜி செரினா பாபி ,தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ் கமல், ஆகியோர்சிறப்புரையாற்றினர்.
முன்னதாக கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய உதவி இயக்குனரும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாருமான எஸ் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை  பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி நன்றி  கூறினார் 
இதில்  லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன  இயக்குனர் எஸ் பானுமதி, மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும்  தொழில் முனைவோர்கள்  120 பேர்  கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர்  சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி உட்பட பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad