மாநகராட்சி சுகாதார பிரிவு தொற்று நோய்களை எதி்ர்கொள்ளும் நிலையில் தயாராக உள்ளது – மேயர் ஜெகன் உறுதி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 December 2022

மாநகராட்சி சுகாதார பிரிவு தொற்று நோய்களை எதி்ர்கொள்ளும் நிலையில் தயாராக உள்ளது – மேயர் ஜெகன் உறுதி


தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநகராட்சிக்குட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு, அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பழைய பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதிமுக எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாக தகவல் வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என்ன நிலையில் இருக்கிறது. மக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார்.
மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலையில் உள்ளன. சுகாதார அதிகாரிகளும், மக்கள் நலன் கருதி விழிப்புணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள் பரிசீலனை
மகேஸ்வரி, திமுக எங்களது பகுதியில் கால்வாய், சாலைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேயர் வார்டு எண் 22, 23, 24, 25 உள்ளிட்ட 5 வார்டுகளில் உங்களது கோரிக்கை பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என்று கூறியதோடு, உதவி செயற்பொறியாளர் பணிகளை மேற்கொள்வதாக கூறினார்.
திமுக கவுன்சிலர்கள் பொண்ணப்பன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், சுப்புலெட்சுமி ஆகியோர் மேயர், ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திமுக கவுன்சிலர் வைதேகி பேசுகையில் எங்கள் பகுதியில் உப்பள தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அவர்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும் என்றார்.
மேயர் அரசு விதிகளின் படி என்ன சலுகைகள் அளிக்கமுடியோ அதை மாநகராட்சி நிறைவேற்றும் என்றார். திமுக கவுன்சிலர் இசக்கிராஜா தங்களது பகுதியில் நடைபெற்ற பணிக்கு நன்றி தெரிவித்தும், சில பணிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேயர் உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள்: தங்களது பகுதியில் குடிதண்ணீர் உடைப்பு ஏற்பட்டு குடி தண்ணீர் வீணாகுகிறது. அதை பழுது செய்து சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையுடன் சில பணியை முன் வைத்தார்.
ஆலோசனை கூட்டம்
மேயர் இது போன்ற குறைகளை எனக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். தினசரி குடிநீர் வழங்குவதால் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:
மாநகராட்சி பகுதிகளில் 4500 சாலைகள் உள்ளன. அதில் எது முக்கியமானது என்று கருதி முதல் கட்ட பணிகள் ஜனவரி பிறந்ததும் 60 வார்டு பகுதிகளிலும், புதிய தார் சாலை அமைக்கப்படும். கால்வாய்கள் பல பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. பக்கிம் கால்வாய் இருந்தாலும், புதிய கால்வாய் தேவை என்கிற பட்சத்தில் திட்டம் நிறைவேற்றப்படும்.
பொங்கல் திருநாளை பொதுமக்கள் பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவதற்கு பூங்காக்கள் சீர் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும். அனைத்து பணிகளையும் முழுமையாக எல்லா பகுதிகளுக்கும் செய்து கொடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக, காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள், செயற் பொறியாளர் அசோகன், உதவி செயற் பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.No comments:

Post a Comment

Post Top Ad