ஐ. டி. ஐகளுக்கான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி. எஸ். பி. தொடங்கி வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 December 2022

ஐ. டி. ஐகளுக்கான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி. எஸ். பி. தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி 21.12.2022ல் தொடங்கி 3 நாட்கள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்  எல். பாலாஜி சரவணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த பின் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "விளையாட்டு போட்டிகளில்
ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றிபெற முடியும்,
அதே போல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். அதேபோன்று நாம் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்தால் நமது வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும்.
தோல்வியை கண்டு சோர்வடையாமல், அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டாலே வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். நமது ஆரோக்கியமே நமக்கு மிகப்பெரிய சொத்தாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வலிமையானது, உங்களது நல்ல எண்ணங்களே உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும். ஆகவே மாணவ மாணவிகளாகிய நீங்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனையாளர்களாக வரவேண்டும்
என்று வாழ்த்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் துணை இயக்குநர் முனைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இப்போட்டியில் திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழக மேற்பார்வை பொறியாளர் வேதநாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிசயராஜ், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் ராதாகிருஷ்ணன்,
லெட்சுமணன், அருள் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பல தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad