தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 35ஆவது நினைவு தின மெளன ஊர்வலம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 December 2022

தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 35ஆவது நினைவு தின மெளன ஊர்வலம்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 35ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் டூவிபுரம் அதிமுக அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மெளன ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலத்தில் அமைப்புச் செயலாளர் சின்னதுரை,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், செரினா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, கொறடா வக்கில் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, இளைஞர் பாசறை ஜெ.ஜெ.தனராஜ், எம்ஜிஆர் இளைஞரணி வலசை வெயிலுமுத்து, ஜோஷ்வா அன்பு பாலன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், சேவியர், வட்ட செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், சந்திரசேகர், அருண்ராஜா, டேவிட் ஏசுவடியான், ராமச்சந்திரன், சுயம்பு, முருகன், பாக்கியராஜ், கொம்பையா, வெங்கடேஷ், அருண்ஜெயக்குமார், மணிகண்டன், நௌசாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், அந்தோணிராஜ், பூர்ணசந்திரன், செல்வராஜ், கண்ணையா, வட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மெளன ஊர்வலம் பழைய நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, அதிமுக தொண்டர்கள் சிலர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad