திருச்செந்தூர் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 December 2022

திருச்செந்தூர் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!!.


உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தை மக்கள் வெகு  விமர்சையாக கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழகத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குமாரபுரத்தில் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அங்கு படிக்கும் மாணவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு ஜிங்கிள் பெல்ஸ் என்ற பாடலுக்கு குழந்தைகள் நடனமாடி மத நல்லிணக்கம், தேசிய பண்பாடு பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மாணவர்கள், குழந்தை இயேசுவின் பிறப்பினை இசை, நாடகம், சொற்பொழிவு மூலம் வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப்போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மழலையர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் போன்று வேடமணிந்து இயேசு கிறிஸ்து பற்றிய செய்திகளை நாடகங்களாக நடித்து காட்டினர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்  அடைக்கலாபுரம் தூய வளன் அறக்கட்டளை, இயக்குநர் புரோமில்டன் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜெயதாஸ் முதல்வர் கண்ணு, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் கடைசியில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad