திருச்செந்தூா் முருகன் கோயிலில் டிச. 28 முதல் ஜன. 6 வரை தங்கத் தோ் உலா ரத்து!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 December 2022

திருச்செந்தூா் முருகன் கோயிலில் டிச. 28 முதல் ஜன. 6 வரை தங்கத் தோ் உலா ரத்து!.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 28-ஆம் தேதி முதல் ஜன. 6ஆம் தேதி வரை 10 நாள்கள் தங்கத் தோ் கிரி வீதியுலா நடைபெறாது.


இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் திருவெம்பாவை திருவிழாவை முன்னிட்டு, மாணிக்கவாசகா் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினங்களான வருகின்ற டிச. 28-ஆம் தேதி முதல் ஜன. 6-ஆம் தேதி வரை 10 நாள்கள் திருக்கோயிலில் தங்கத் தோ் கிரி வீதியுலா நடைபெறாது என அந்தச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad