நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு பெரும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 November 2022

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு பெரும் விழா

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியும், தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை மாசிலாமணி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் சாந்தகுமாரி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். 


சிறப்பு அழைப்பாளராக நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்வில் துணை தலைவர் தம்பு. திமுக பொதுக்குழு உறுப்பினர் ரவிசெல்வகுமார். வார்டு உறுப்பினர்கள் சாமுவேல். அதிசயமணி மற்றும் அலுவலக ஊழியர் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad