குளத்தூர் கல்லூரியில் ஆல்கஹாலிக் அனானிமஸ் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 November 2022

குளத்தூர் கல்லூரியில் ஆல்கஹாலிக் அனானிமஸ் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி.எம்.எம் கல்லூரியில் சிகப்பு நாடா குழு சார்பில்  சமூகத்தையும் குடும்பங்களையும் இளைஞர்களையும் கெடுக்கும் குடி நோயான மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால்  முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர்.அன்பழகன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். முனைவர் கோபால் பேசுகையில் "இன்றைய கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களிடம் உள்ள மது, போதை போன்ற தீய செயல்களை விட்டு நல்ல பண்புகளை வளர்த்து கொண்டால் வீட்டிற்கும் நாட்டிற்கும் பண்புள்ளவர்களாக திகழளலாம் என்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை ஆய்வாளர். விஜயலட்சுமி, "மாணவர்கள் குடி போன்ற போதை பழக்கங்களினால் பல்வேறு வகையான குற்றங்களை செய்ய தூண்டப்படுகிறார்கள். 


எனவே எந்தவிதமான போதைப் பழக்கமாக இருந்தாலும் அதனை விட்டுவிட்டு  நல்வழிக்கு திரும்ப வேண்டும். ஏராளமான விபத்துக்கள் குடிப்பழக்கத்தின் மூலமாக நடந்து விடுவதாலும், இந்த தீய பழக்கத்தினால் வீட்டிலும் நாட்டிலும் அவர்களின்  மரியாதை கெட்டுவிடுகிறது" என்று கூறினார். மேலும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் என்ற குடி நோய் பற்றிய விழிப்புணர்வு குழுவில் இருந்து வருகை தந்திருந்த  சுரேஷ்  தண்டாயுதபாணி, சுரேஷ் குமார் ஆகியோர் "அவர்கள் வாழ்க்கையில்  குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட இன்னல்களையும் அதிலிருந்து விடுபட்ட நிகழ்வுகளையும் அதன் மூலமாக கிடைத்த நன்மைகளையும் மாணவர்கள் மத்தியில் எடுத்துக்காட்டுகளோடு தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் வீடுகளுக்கு அருகே இருக்கக்கூடிய குடும்பத்தில் யாராவது குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்களை இந்தக் குழுவில் பகிர்ந்தால் உடனடியாக அவர்களை குடி, போதைப் பழக்கத்தில் இருந்து திருத்தி நல்ல மனிதராக மாற்றக்கூடிய பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறினார்கள்.


சிவப்பு நாடா குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நன்றி உரையுடன் விழா  இனிதே நிறைவடைந்தது.


No comments:

Post a Comment

Post Top Ad