திருச்செந்தூர் ஷஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவில் அர்ச்சகர்களுக்கு, கோவில் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 November 2022

திருச்செந்தூர் ஷஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவில் அர்ச்சகர்களுக்கு, கோவில் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது!


திருச்செந்தூர் ஷஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவில் அர்ச்சகர்களுக்கு, கோவில் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு  பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது!

ஷஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவில் பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவில் பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமுத்தாரம்மன் குரூப் சார்பில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான வேஷ்டி சேலைகளை இலவசமாக வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை மிக  கோலாகலமாக நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரஸம்ஹாரம் கடந்த 30-ஆம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழா நாட்களில் கோவிலில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகளில் திறம்பட பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு சென்னை ஸ்ரீ முத்தாரம்மன் குரூப்ஸ் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 

அப்போது திருவிழா நாட்களில் சிறப்பாக பணியாற்றிய கோவில் பாதுகாப்பு பணியாளர்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்ட கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் சுமார் 5000 பேர்களுக்கு சென்னை ஸ்ரீ முத்தாரம்மன் குரூப்ஸ் நிறுவன உரிமையாளர் டாக்டர் சிவக்குமார் பல லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள், வேஷ்டிகள், தீப எண்ணெய் மற்றும் கந்தசஷ்டி புத்தங்களை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அவருடன் ஸ்ரீ முத்தாரம்மன் குரூப்ஸ் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad