மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை போட்டிகள்.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 November 2022

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை போட்டிகள்.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாப்பிளையூர் அணி டீ.சவேரியார் புறத்தில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில்  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில் நவம்பர் 6ம் தேதி ஞாயிறு  அன்று மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடைபெற உள்ளன.  இதில் குரல் இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. 


இதில் 5 வயது முதல் 16 வயது வரை  உள்ள சிறுவர் சிறுமியர் கலந்து கொள்ளலாம். முதல் பரிசாக ரூபாய்10,000, இரண்டாம் பரிசு 7500 மூன்றாம் பரிசு 5000 வழங்கப்படும். போட்டியின் விதிமுறைகள் மற்றும் போட்டியில் கலந்து கொள்வதற்கான நடைமுறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள 9487739296 என்ற திட்ட அலுவலரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad