திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் 7 பெண்களிடம் 45 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 November 2022

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் 7 பெண்களிடம் 45 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. இதில் தமிழகம் மற்று வெளிமாநிலம் முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 


இந்நிலையில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கடற்கரையில் சூரசம்ஹாரம் நடந்தபோது திருட்டு கும்பல்கள் தங்கள் கை வரிசை காட்டியுள்ளனர். இதில் 7பெண் பக்தர்களிடம் 45 பவுன் நகைகள் பறிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபட்டி பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி உச்சினி மாகாளி (65) என்பவரிடம் 4 பவுன் நகை, தூத்துக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி மங்கள ஈஸ்வரிடம்  7½ பவுன் நகை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திருவேணி கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா மனைவி தனலட்சுமி என்பவரிடம் 6 பவுன் நகை, நாமக்கல் மாவட்டம் கடையநூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மனைவி மல்லிகா என்பவரிடம் 4பவுன் நகை, தென்காசி கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்த காளி மனைவி முத்தாரம்மாள் என்பவரிடம் 4 பவுன் நகை, ராதாபுரம் ஆறுமுக நயினார் மனைவி துரைப்பழம் என்பவரிடம் 10½  பவுன் நகையும் தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்த கணேசன் மனைவி ஜெயராணி என்பவரிடம் 9 பவுன் நகை என 7 பெண்களிடம் 45 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது. 


இது சம்பந்தமாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad