சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை திருச்செந்தூர் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 7 November 2022

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை திருச்செந்தூர் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நவ.,8ம் தேதி  நடைபெறவுள்ள சந்திரகிரஹணத்தை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படடுகிறது, தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 


மதியம் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. அந்நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. பின்னர் 7 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், பக்தர்கள் தரிசனமும் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad