கிராமங்கள்தோறும் திராவிட மாடல் கொள்கைகளை எடுத்து செல்வோம் - அமைச்சர் அனிதா. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 8 November 2022

கிராமங்கள்தோறும் திராவிட மாடல் கொள்கைகளை எடுத்து செல்வோம் - அமைச்சர் அனிதா. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்


  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டை  தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், சுதாகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர் வரவேற்புரையாற்றினார்.

  தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் மாநில சுயஆட்சி கொள்கையை கலைஞர் முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணம் போல் இயக்கப்பணி மக்கள்பணி, ஆகியவற்றை மாநில இளைஞர் அணி செயலாளர்   உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ  விருப்பப்படி இளைஞர்கள் செயல்பட வேண்டும். அறிஞர் அண்ணா, மாநில சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி கொள்கையை தொடங்கி வைத்து மாநில உரிமையை ஓருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார். அண்ணா கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு துணையாக உதயநிதி எம்.எல்.ஏ, கனிமொழி எம்.பி குரல் கொடுத்து வருகின்றனர். ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வாங்கி கொள்கின்றனர். நமது நிதியை பெறுவதற்காக நாம் போராட வேண்டியிருக்கிறது. மாநில அரசை ஒன்றிய அரசு மதிப்பதில்லை. கடந்த காலத்தில் நீட் தேர்வை கொண்டு வந்த போது பலரும் பாதிக்கபடுவார்கள் என்று கலைஞர் அத்திட்டத்தை தடுத்து நிறுத்தினார். ராஜாஜி கொண்டு வந்த குல கல்வியை போல் செய்ய வேண்டும் என்று அவர்கள் செய்த தொழிலையே அவர்கள் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. கடந்த காலத்தில் மாராப்பு மேலே சேலை போட முடியாது இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு செருப்பு அணியாமல் இருந்த நிலை மாற வேண்டும். மனிதனை மனிதர்களாக மதிக்க வேண்டும். என்று கொண்டு வந்தது தான் திராவிட இயக்க வரலாறு. திருச்செந்தூரில் சாமி கும்பிட வெளியில் நின்று தான் தரிசனம் செய்ய வேண்டும். நம்மை தீண்ட தகாதவர்களாக பார்த்தனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது நம்முடைய திமுக ஆட்சி, இந்தி தினிப்பை அமுல் படுத்துவதற்கு அமித்ஷா ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளை அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது மாநில சுய ஆட்சி திராவிட வரலாறு என்ன என்பதை இளைஞர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதை புரிந்து கொண்டு 234 தொகுதிகளிலும் இது போன்ற கருத்துகளை மனதில் ஏற்றிக்கொண்டு நமக்கெதிராக கருத்துகள் சொல்லுபவர்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறை சேர்க்க வேண்டும். திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் தவறாக பரப்புரை  செய்கின்றனர். மதத்தை வைத்து பிரச்சனை செய்கின்றனர் சிலர் அதை முறியடிக்கவேண்டும். திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று பேசினார். மாநில சுய ஆட்சி என்ற தலைப்பில் கோவிலெனின் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வக்கீல் ராஜீவ்காந்தி ஆகியோர் பல்வேறு கேள்விகளை இளைஞர்களிடம் கேட்டு வரலாறுகளை எடுத்துரைத்தனர்.

   கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட கவன்சிலர்கள் செல்வகுமார், பிரம்மசக்தி,  ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, மாணவரணி அமைப்பாளர்கள் அருண்குமார், ஆர்வி.ஷாண்டல், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு,  வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார்,  ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மாசிலாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ், அலெக்ஸ்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகநாராயணன் நன்றியுரையாற்றினார்.


 

No comments:

Post a Comment

Post Top Ad