நாசரேத் பொறியியல் கல்லூரியில்தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 November 2022

நாசரேத் பொறியியல் கல்லூரியில்தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்


நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட குழு மற்றும் ஜெயராஜ் அன்னாபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 7 அன்று நடைபெற்றது. முகாமிற்கு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக புனித லூக்கா மருத்துவமனை மருத்துவர், மிஷ்டினா மனோ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் பாதுகாத்தல் பற்றி சிறப்புரையாற்றினார்.  நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி ஆங்கில துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான அ. ஷெர்லின் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இந்த முகாமில் இரு கல்லூரிகளைச் சார்ந்த 120 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    இந்த முகாமை மர்காஷிஸ் கல்லூரி தாளாளர்  பிரேம்குமார் இராஜசிங், பொறியியல் கல்லூரி தாளாளர்  ஜெயக்குமார் ரூபன்  மற்றும் முதல்வர்கள் முனைவர் குளோரியம் அருள்ராஜ், முனைவர் ஜெயக்குமார் ஆகியோர்களின் ஆலோசனைப்படி இரு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர்.சாமுவேல் தங்கராஜ் கோரேஸ், ஷெர்லின் ராஜா, . ஞானசெல்வன், . ஜெனிபர் கிரேனா மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad