குளத்தூர் கல்லூரியில் "வருமானத்தின் வகைகள் "சிறப்பு சொற்பொழிவு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 November 2022

குளத்தூர் கல்லூரியில் "வருமானத்தின் வகைகள் "சிறப்பு சொற்பொழிவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி. எம். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் வருமானத்தின் வகைகள் என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியை சண்முக நிர்மலா சிறப்புரை வழங்கினார். இதில் சம்பளம் மூலமாக வருவாய், வீட்டு வாடகை மூலமாக வருவாய், முதலின வரவுகள் மூலமாக வருவாய், தொழில் மூலமாக வருவாய் மற்றும் இதர வருவாய் ஐந்து வகையான வருமானங்களை
 அழகாக வகைப்படுத்தி ஒவ்வொரு வருமானத்திலிருந்து வரி கணக்கிடும் விதத்தினை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். கல்லூரி மாணவி மேன்சி வரவேற்புரை வழங்க,சிறப்பு விருந்தினர் பேராசிரியை சண்முக நிர்மலாவுக்கு நினைவு பரிசினை கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால் வழங்கினார்.  மாணவர் பரத் நன்றி உரை வழங்க விழா  இனிதே நிறைவுற்றது. விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மாணவி கிருஷ்ணவேணி சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் தலைமையில் அனைத்து பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad