முடிவைத்தானேந்தல் கிளை நூலகத்தில் மெய்நிகர்நூலக வசதி துவக்க விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 November 2022

முடிவைத்தானேந்தல் கிளை நூலகத்தில் மெய்நிகர்நூலக வசதி துவக்க விழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முடிவைத்தானேந்தல் பகுதியில் இயங்கி வரும் தமிழக அரசின் கிளை நூலகத்தில் மெய்நிகர்நூலகம் எனப்படும் Virtual Reality library வசதி துவக்க விழா பொதுநூலக இயக்குநரின் ஆணைக்கிணங்க,மாவட்ட நூலக அலுவலர் பெ.மீனாட்சி சுந்தரம்  அறிவுறுத்தலின்படி,நவம்பர் 07ம் தேதி  நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை நூலகர் க.முருகன்  வரவேற்றார். முடிவைத்தானேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் மா.ரம்யா   நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க,
வாசகர்வட்டதலைவர் பி.மாணிக்கம் முன்னிலை வகிக்கத்தார். மாவட்ட மையநூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் கொ. சங்கரன் விழாவில் கலந்துகொண்ட
இந்து நடுநிலைபள்ளியில் பயிலும் சுமார்-35 மாணவ,மாணவிகளுக்கு மெய்நிகர்நூலக செயல்விளக்க பயிற்சினை வழங்கினார்.
பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகள், மெய்நிகர்நூலக கற்பனை உலகின் மகிழ்ச்சியை அனுபவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் நிறை வில் இந்துநடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் எஸ். மாரிமுத்து,ஆசிரியை திருமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.வாசகர்  ஜெ.கண்ணப்பன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad