மூக்குப்பீறி தமிழ் மன்றத்தில் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 9 November 2022

மூக்குப்பீறி தமிழ் மன்றத்தில் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் கிராம புற தமிழ் மன்றம் கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் தேவதாசன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். பஞ்சாயத்து பணியாளர் மோசஸ் தயாளன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தூத்துக்குடி மாரிமுத்துவின் உளி தீண்டா கல்லோவியம் கவிதை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. கோவை மருத்துவர் அபிராமி கனேஷச மூர்த்திக்கு அன்னை தெரசா விருதும், நெல்லை கவிஞர் தேவனுக்கு எழுச்சி கவி வித்தகர் விருதும் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எழுத்தாளர்கள் ஆறுமுகப்பெருமாள், அருள்ராஜ்,ஓய்வு பெற்ற தாசில்தார் ஐயாக்குட்டி,
கவிஞர் சிவா என்ற வீரபாலாஜி,ஜாண் பிரிட்டோ,வள்ளுவர் வாசகர் வட்டம் தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். . முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் விவின் ஜெயக்குமார் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
No comments:

Post a Comment

Post Top Ad