"உணவு பாதுகாப்பு உரிமம் சிறப்பு மேளா” மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 November 2022

"உணவு பாதுகாப்பு உரிமம் சிறப்பு மேளா” மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்


தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள அகில இந்திய  சேம்பராப் காமர்ஸ் அலுவலக அரங்கில், உணவு பாதுகாப்புத் துறையால் “உணவு பாதுகாப்பு உரிமம் சிறப்பு மேளா”  நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது. சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட நியமன அலுவலர் ச.மாரியப்பன் முன்னிலையில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். 
விழாவில் ஆட்சியர் பேசும்போது,
அரசு மற்றும் தனியார் வசம் உள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து வகை உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.   தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் 15 சதவீத உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகர்கள் உரிமம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. வணிகர்கள் தாமாகவே முன்வந்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே இச் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. எனவே வணிகர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். விழாவில் அகில இந்திய தொழில் வர்த்தக சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு, முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் விவேகம் ரமேஷ், பழரசம் விநாயக மூர்த்தி உட்பட வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad