மாவட்ட மைய நூலகத்தில் நவம்பர் 13ம் தேதி குரூப் 1 இலவச மாதிரி தேர்வு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 November 2022

மாவட்ட மைய நூலகத்தில் நவம்பர் 13ம் தேதி குரூப் 1 இலவச மாதிரி தேர்வு

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் குரூப் 1 முதல் நிலை தேர்வு வரும் 19.11. 2022 அன்று நடைபெற உள்ளது.இந்த தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு தூத்துக்குடி மாவட்ட மைய  நூலகத்தில் வரும் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 க்கு தொடங்கி 12:30 மணி வரை மாதிரி நடைபெற உள்ளது. தேர்வில் வெற்றி பெறும் முதல் 8 நபர்களுக்கு நூலக வார விழாவில் பரிசுகளும் வழங்கப்படும். தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டின் நகலை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் மேலும் இந்தத் தேர்வு பற்றிய கூடுதல் தகவலுக்கு 0461 -2338977 என்ற தொலைபேசி எண்ணிலோ
 94880 71114,
 9952384714
எண்ணிலோ காலை 9.30லிருந்து மாலை 5.30 மணி  வரை தொடர்பு கொண்டு  பெறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad