திருச்செந்தூர் கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 26 November 2022

திருச்செந்தூர் கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் நிலத்தில் சடலங்கைள புதைக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad