தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 26 November 2022

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது!


தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேவர் மஹாலில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்செந்தூர் வட்டார தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். தாலூகா நிருபர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

செந்தூர் செய்தி ஆசிரியர் மைக்கில் வரவேற்புரை ஆற்றினார் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஜாதி, மதம், கடந்து செயல்படுவதுதான் சிறந்த  பத்திரிகையாளர் எனவும், எந்த இடத்தில் பிரச்சினை நடந்தாலும்  அசம்பாவிதம் நடைபெறும் முன் காவல்துறையினருக்கு தெரிவிப்பது நம் பத்திரிகையாளர்களின் கடமை எனவும் அறிவுரைகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவனேசன் மாவட்ட அமைப்பாளர் அஜித் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தனர்.


திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் முரளிதரன் கலந்து கொண்டு விழாவில்  பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் காவல்துறையினருக்கு நல்ல உதவியாக இருந்து வருகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விழாவில் கலந்து கொண்ட  பத்திரிகையாளர் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை கூறினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மார்க் மகேஷ் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் குரும்பூர் பகுதி செய்தியாளர் ஆவுடையப்பன், போலீஸ் நியூஸ் ஹரிஹரன்  மாலை யுகம் தாலுகா நிருபர்  முத்து சுப்பிரமணியன்,நிருபர் கணேஷ் ,முத்து ,இசைவாழன், சதானந்த், அந்தோணி ரொமான்ஸ் ஆக்னல் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர் .


கூட்டத்தில் தமிழக அரசு பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்ததற்கு இக்கூட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் சிறப்பாக நடத்திய மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செந்தூர் நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் முரளிதரன் ஆகியோருக்கு கூட்டம் நன்றி தெரிவித்து. பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad