திருச்செந்தூரில் புதிய மோட்டார் வாகனம் திருத்த சட்டம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 November 2022

திருச்செந்தூரில் புதிய மோட்டார் வாகனம் திருத்த சட்டம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புதிய மோட்டார் வாகனம் திருத்த சட்டம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வழங்கினார். வாகன விபத்துகளை தவிர்க்க எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும் பெரும்பாலானோர் விதிகளை மீறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். 

சிறிய விதி மீறல் பெரிய இழப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே அபராத தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும் என்று மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. 


அதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல்  வாகனத்திற்கு ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000, சீட்பெல்டு அணியாமல் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.1000, காப்பீடு செய்யாத வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் போன்ற அபராத தொகையை குறித்து வாகனஓட்டிகளிடம் ஒலிபெருக்கின் மூலம்  போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வழங்கினர்.


இந்த நிகழ்வின் போது போக்குவரத்து உதவி பிரிவு வேல்முருகன்,உதவி ஆய்வாளர் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன், தலைமை காவலர் கோபாலகிருஷ்ணன், முதல் நிலைக் காவலர் திருநாவுக்கரசு, முகமது யூசுப்கான் மற்றும் திருச்செந்தூர் ஆட்டோ சங்க உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad