தாலுகா அலுவலகத்திற்கு வ.உ.சி.சிதம்பரனாரின் பெயர் சூட்ட வேண்டும் என சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் தூத்துக்குடி ஆட்சியரிடம் கோரிக்கை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 November 2022

தாலுகா அலுவலகத்திற்கு வ.உ.சி.சிதம்பரனாரின் பெயர் சூட்ட வேண்டும் என சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் தூத்துக்குடி ஆட்சியரிடம் கோரிக்கை!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் குறைதீர்ப்பு முகாமில் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய தாலுகா அலுவலகத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர்  சட்டப்பேரவையில் ஐயா வ.உ.சி யின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் தூத்துக்குடி,கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு  புதியதாக கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கு ஐயா வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

அந்த அறிவிப்புக்கு இணங்க திருச்செந்தூர் மற்றும் சாத்தான் குளத்தில் கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலக கட்டிடங்களுக்கு ஐயா வ.உ.சியின் பெயரை சூட்ட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சைவ வேளாளர் ஐக்கிய சங்கம், மற்றும் வ.உ.சி.நற்பனிமன்றம்சார்பில் மனு அளித்தார்கள்.


நிகழ்ச்சியில் தலைவர் நெ.ஆனந்த இராமச்சந்திரன், செயலாளர் ச.வெங்கடாசலம், பொருளாளர் P.V.பொன் முருகேசன், வ.உ.சி நற்பணி மன்ற நிறுவனர்  இசக்கி முத்து , நிர்வாகஸ்தர் ஜெகநாத பெருமாள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad