ஸ்ரீவைகுண்டம் அணையில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்; உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 November 2022

ஸ்ரீவைகுண்டம் அணையில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்; உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!!.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்வினை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


உலக மீன்வள தினத்தை முன்னிட்டு திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்வினை  அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.


நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad