தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 November 2022

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப கூறியும் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை சத்துணவு பணியாளர்கள் மூலம் வழங்க அரசாணை பிறப்பிக்க கூறியும் ஓய்வு பெறும் வயதினை அறுவதில் இருந்து 62 ஆக உயர்த்த கோரியும் தேர்தல் கால வாக்குறுதிணை காலம் வரை ஊதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில தணிக்கையாளர் மற்றும் வட்ட தலைவர் எல்பிஜி பாண்டியன் தலைமை ஆற்றினார் மாநில தணிக்கையாளர் வட்டத் தலைவர் ஏ பாக்கியசீலி மாவட்ட செயலாளர் எம் ஜெயலட்சுமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளா ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் மாவட்ட தலைவர் உத்தாண்ட ராமன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் கனகவேல் மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் பொருளாளர் சண்முக லட்சுமி ,200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad