திருச்செந்தூர் நகராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 November 2022

திருச்செந்தூர் நகராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது!


திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் நகரச் செயலாளர் வாள் சுடலை ஆகியோர் தலைமையில் அவர் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு அங்கு பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 


அதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் இரும்பு ஆர்ச அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மேலும் தொழிலாளர் முன்னேற்ற கழகம் சார்பி்ல் திருச்செந்தூர் அரசு பேருந்து பணிமனை முன்பு நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொமுச தலைவர் அரவிந்த் செயலாளர் ஜெயக்குமார் பொருளாளர் தினகர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி மாரியப்பன் ஜோசப் பிரச்சார செயலாளர் முருகன் செய்திருந்தனர். பின்பு அடைக்கலாபுரம் உள்ள அன்பகம் பெண்கள் நல்வாழ்வு மையத்தில் 600 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.   


இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார் மணல்மேடு சுதாகர், ஆனந்த ராமச்சந்திரன் , முத்துகிருஷ்ணன் ஆட்டோ கண்ணன், தினேஷ் கிருஷ்ணா நகர துணை செயலாளர்கள் சுதா, பெரு மகாராஜன் மற்றும் குழந்தைவேல் மோகன் சந்திரசேகர் பிரபின் டேனியல் பள்ளிப்பத்து ரவி, அமலி சந்திரன், குமரன், பாலகிருஷ்ணன் மற்றும் திமுக ஒன்றிய, நகர பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad