உதயநிதி ஸ்டாலின் 45 பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு மோதிரம் வழங்கி அசத்திய ரசிகர்கள்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 29 November 2022

உதயநிதி ஸ்டாலின் 45 பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு மோதிரம் வழங்கி அசத்திய ரசிகர்கள்!


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

முன்னதாக ஜோயல் ஆலோசனைபடி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் வீரபண்டிய பட்டணத்தில் மன்ற பெயர் பலகை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 


இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பால்துரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, விமல், சிவா மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணப்பாளர் மாரிதுரை, மணிகண்டன், Ex. நகர செயலாளர் மந்திரமூர்த்தி, மகேஸ்வரன் மற்றும் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad