30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - எம்.பி.கனிமொழி , மேயர் ஜெகன் பங்கேற்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 November 2022

30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - எம்.பி.கனிமொழி , மேயர் ஜெகன் பங்கேற்பு

 தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 26.11.2022 அன்று மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 
 தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய அரசியலமைப்பு தின நாள், கல்வி பாதுகாப்பு, இல்லம் தேடி கல்வி திட்டம் வெற்றி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை
கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து துவக்கி வைத்ததுடன்  நிகழ்வில் பேசுகையில்,
"30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடியில் நடைபெறுவது நமக்கு பெருமை, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் குழந்தைகளுக்கு இருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி. அறிவியல் என்று சொல்லும் போது புத்தகத்தில் படிக்க கூடியவை அறிவியல் கிடையாது. 200 ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளை சொல்வதற்கு ஒரு தனிநபர் இருப்பார். இல்லை குதிரை வழியாக, ஓலைச்சுவடிகள் மூலம் செய்திகள் சொல்லப்பட்டது. இப்போது அப்படி இல்லை எவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. குழந்தைகளுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிந்த கொண்டது தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க கூடிய ஒரு சிறுமியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்றும் குழந்தைகள் நன்கு புரிந்து படிக்க வேண்டும் என்றும் கூறினார். 
பின்னர் பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் தன்னார்வலர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். பள்ளி குழந்தைகள் தயார் செய்த இயற்கை இறைவனின் பரிசு, இயற்கையோடு இணைந்து தலைமுறை காப்போம் என்று தலைப்பில் செய்முறை விளக்கத்தை கனிமொழி எம்.பி, மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளிவரும் விஞ்ஞான துளிர் என்ற புத்தகத்தை எம்பி மற்றும் மேயர் பெற்று கொண்டனர்".
நிகழ்ச்சியில் தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டி வரவேற்புரை நிகழ்த்தினார், முன்னாள் கல்லூரி முதல்வர்.முனைவர். சாந்தகுமாரி, தமிழ்நாடு அறிவியல் இயக்க  மாநில தலைவர் பாலகிருஷ்ணன், கருத்துரை வழங்க, இடைநிற்றல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், ஆசிரியர்கள் ஆரோக்கியம் பீட்டர், அந்தோணி, சாந்தா வாழ்த்துரை வழங்கினார்கள், மாநாட்டில் முரளி, கார்த்திகா, தனலெட்சுமி, புவனேஸ்வரி, கிங்ஸ்லின், கன்னகி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக என்.சி.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகர்பான் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad