அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் : ஓபிஎஸ் அறிவிப்பு!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 18 November 2022

அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் : ஓபிஎஸ் அறிவிப்பு!.

தூத்துக்குடி மாவட்ட அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அ.தி.மு.க. இளைஞரணி இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த கருப்பூர் கே.சீனி என்கிற ராஜகோபால் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

தூத்துக்குடி புறநகர் வடக்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி புறநகர் தெற்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் வடக்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 


இதன் அடிப்படையில், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். எஸ்.ஏசாதுரை (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்), டாக்டர் ம. புவனேஸ்வரன் (தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), டி.வினோபாஜி, (தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்). இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad