திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது!! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 14 November 2022

திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின்  உதவி தலைமை ஆசிரியர் சங்கரி தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க பொருளாளர் திரு க.ஜெகநாத பெருமாள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் தின விழா பரிசு போட்டியில் வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு திருச்செந்தூர் நகராட்சியின் துணைத் தலைவர் திரு A.B. ரமேஷ்  பாராட்டி பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக  இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் S.A.செந்தில்குமார்  வ உ சி நற்பணி மன்ற தலைவர் திரு இசக்கிமுத்து பொறியாளர் திரு பழனிச்செல்வம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேச்சியம்மாள் மேலாண்மை குழு உறுப்பினர்கள்  ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முடிவில் ஆசிரியை திருமதி  ரீட்டா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ சந்திரசேகர் சிறப்பாக செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad