தூய மாற்கு பள்ளி என். எஸ். எஸ் முகாமின் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 11 November 2022

தூய மாற்கு பள்ளி என். எஸ். எஸ் முகாமின் விழிப்புணர்வு பேரணி

தூய மாற்க்கு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் ஏழு நாட்கள் நடைபெற்றது.
ஓய்யான்குடியில் நடைபெற்ற இந்த முகாமின் தாளாளர் செல்வின் தலைமை வகித்தார்.அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, டெங்கு காய்ச்சல்,பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.சித்த மருத்துவர் ராஜேஸ்வரி  ஆரோக்கிய வாழ்வு என்ற தலைப்பில் கருத்தரங்கு மூலம் மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு வழங்கினார்.
மூக்குப்பீறி ஐக்கிய முன்னேற்ற சங்க தலைவர் அருள்ராஜ் மரம் நடு விழாவை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் எட்வின் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.பழைய முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார், கமலாவதி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனைகளை எடுத்து கூறினர். இன்றைய கால சூழலில் மாணவர்களுக்கு தேவைப்படுகின்ற தற்காப்பு பயிற்சியினை கராத்தே மாஸ்டர் டென்னிசன் கூறினார். மாணவர்கள் மத்தியில் இன்று மிக முக்கியமான பிரச்சினையாக வரக்கூடிய மன அழுத்தம் பற்றியும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார தேவைகள் பற்றியும் மருத்துவர் கபிலன் மற்றும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் செல்வராஜ் ஆகியோர் அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் ஏக ரட்சகர் பள்ளியின் உடைய முன்னாள் தலைமை ஆசிரியர் தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கிரேசியா பார்சூன் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஜெபமரிய ஸ்டெல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad