மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொழில் துவங்க நிதி உதவி.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 November 2022

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொழில் துவங்க நிதி உதவி.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு.

தமிழ்நாடு அரசு வேளாண் உழவர் நலத்துறை 2022-23, வேளாண் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் என்ற திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க நிதி உதவியாக  அதிகபட்சம் ரூபாய் ஒரு லட்சம் வரை பின்னேற்பு மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில்  பங்கு பெற்று பயன் பெற தகுதிகளும் நிபந்தனைகளும்

1. கல்வி தகுதியாக வேளாண்மை தோட்டக்கலை வேளாண்மை பொறியியல் இதில் ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்த பட்சம் இளநிலையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

2.வயது வரம்பு 21 முதல் 40 வரை

3.விண்ணப்பதாரர் கணினி கையாளும் திறன் பெற்று இருப்பது அவசியம்.

4.ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே
விண்ணப்பிக்கலாம்.

5. விண்ணப்பதாரர் அரசு மற்றும் தனியா நிறுவனத்தில் பணி புரிபவராக இருத்தல் கூடாது.

6.வங்கி மூலம் கடன் பெற்று தொழில் செய்யும் நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

7.பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தப்படும் குழு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்,வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும்.

8. நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவை திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக்கூடாது.

தூத்துக்குடி வட்டாரத்தைச் சார்ந்த மேற்கண்ட தகுதியுடன் விண்ணப்பிக்க விரும்புவோர் மேலும் விவரம் அறிய தூத்துக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலரை 94 880 805 16,8056764148 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad