திருச்செந்தூர் பள்ளியில் தூய்மைப்பணி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 20 October 2022

திருச்செந்தூர் பள்ளியில் தூய்மைப்பணி!

திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடுகிறார் தலைமையாசிரியர் மாரியம்மாள். திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு தூய்மைப்பணி நடைபெற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அரசுப்பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நடைபெற்றது. இதன்படி திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முழுமையான தூய்மைப்பணிகள் நடைபெற்றது.

 
இதில் பள்ளி வகுப்பறைகள், வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மாரியம்மாள் தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் கவிதா மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் க.சங்கரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad