திருச்செந்தூரில் பயனாளிக்கு பிறப்பு சான்றிதழை வழங்கினார் நகராட்சி ஆணையர் தி.வேலவன்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 October 2022

திருச்செந்தூரில் பயனாளிக்கு பிறப்பு சான்றிதழை வழங்கினார் நகராட்சி ஆணையர் தி.வேலவன்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் விதமாக பிறப்பு, இறப்பு பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கும் பணியை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு அரசு அலுவலங்களில் மக்கள் குறைதீர்க்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்படி திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் உடனடியாக பரீசிலணை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு சான்றிதழை ஆணையர் தி.வேலவன் வழங்கினார். இதில் திரளான பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர். 


மேலும் நகராட்சி அலுவலகத்தில் முழுமையான சுகாதாரப்பணிகள் நடைபெற்று விழிப்புணர்வு கோலமிடப்பட்டதுடன், வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad