குளத்தூர்டி.எம்.எம் கல்லூரியில் " நகைச்சுவையும் அதன் தேவையும் " கருத்தரங்கம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 October 2022

குளத்தூர்டி.எம்.எம் கல்லூரியில் " நகைச்சுவையும் அதன் தேவையும் " கருத்தரங்கம்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் " நகைச்சுவையும் அதன் தேவையும் "என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இளங்கலை இரண்டாமாண்டு தமிழிலக்கிய மாணவி ஐ.காயத்ரி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக குளத்தூர் நடுநிலைப் பள்ளி தமிழாசிரியர், முனைவர் கு.செந்தில்குமரனுக்கு கல்லூரி இயக்குனர் முனைவர்.பா. கோபால், முதல்வர் முனைவர் மா. அன்பழகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தனர்.
நிகழ்ச்சி யில் "நகைச்சுவையும் அதன் தேவையும்" என்ற தலைப்பில் கு.செந்தில்குமரன் பேசும்போது "நாம் இருக்கும் இடத்தை கலகலப்பாக மாற்றுவது நகைச்சுவை என்றும் சிலேடை,உயர்வுநவிற்சி,வஞ்சபுகழ்ச்சி,போன்ற வடிவில் நகைச்சுவை  அமையவேண்டும் என்றும்,நகைச்சுவை மனிதன் மட்டுமே  உணரமுடியும்  என்று சிறப்பு ரையாற்றினார்கள்.
மேலும் பல நகைச்சுவைகளைக் கூறி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து
இளங்கலை இரண்டாமாண்டு தமிழிலக்கிய மாணவி செ.ஜெனிபர்ஜாய்ஸ் நன்றியுரை வழங்கினார்.மொத்த நிகழ்வுகளையும் இரண்டாமாண்டு தமிழிலக்கிய மாணவி வே.லாவண்யா தொகுத்து வழங்கினார்
.விழா சிறப்புடன் நடைபெற தேவையான அனை‌த்து நடவடி‌க்கைகளையும் கல்லூரியின் நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் சி. மகாலெட்சுமி, அனைத்து பேராசிரியர்கள் உத‌வியுட‌ன் சிறப்பாக செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad