தூத்துக்குடி மாவட்டம் உருவாகி முப்பத்தி ஏழு ஆண்டுகள் ஆனது குறித்து நிகழ்ந்த தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை தூத்துக்குடியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கொண்டாட மாவட்ட ஆட்சியர்
மரு.கி.செந்தில்ராஜ் இ. ஆ. ப.
அறிவுறுத்தி இருந்தார். அதன் பேரில் அலுவலக சுற்று வளாகங்களை சுத்தம் செய்து வண்ண பலூன்களில் அலங்கரித்து அழகான முறையில் தூத்துக்குடி 37 ஆவது ஆண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட உதயமான நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் உதவி கோட்டப் பொறியாளர் L.முத்தழகன் தலைமை ஏற்று நிகழ்வை தொடங்கி வைத்தார். நிகழ்வில் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்துதலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளநிலை பொறியாளர் M.மாரிமுத்து,
உதவியாளர் V.பிரபா நந்தகுமார், இளநிலை வரை தொழில் அலுவலர் M.தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment