திருச்செந்தூர் சூரசம்ஹார திருவிழா பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவிப்பு!! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 October 2022

திருச்செந்தூர் சூரசம்ஹார திருவிழா பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவிப்பு!!


திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இவ்வாண்டு 30.10.2022 அன்று நடைபெறும் கந்த சஷ்டி மகாசூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் அவர்கள் அறிவிப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரஸம்ஹார விழா வருகின்ற 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவிற்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுவதால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் அறநிலையதுறை இணைந்து பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி சூரஸம்ஹார நிகழ்வையும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தங்கள்:- தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறம் அமைந்துள்ள ஜெ.ஜெ நகரில் சுமார் 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக அன்பு நகரில் உள்ள வியாபாரிகள் சங்க திடலில் சுமார் 3000 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மற்றும் பரமன்குறிச்சி மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக முருகாமடம் அருகில் எப்.சி.ஐ குடோன் திடலில் சுமார் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.


29.10.2022 அன்று காலை 08.00 மணி முதல் மேற்கூறிய வாகன நிறுத்தங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரதான சாலைகளில் சோதனைசாவடிகள் அமைத்து வாகனங்கள் அனுப்பப்படும். திருக்கோவில் வளாகத்தில்  அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களும் மேற்கூறிய வாகன நிறுத்தங்களில் காவல்துறை ஒத்துழைப்புடன் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


அரசு பேருந்துகள் நிறுத்துவதற்காக புதிதாக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  1. தூத்துக்குடி சாலையில் ஆதித்தனார் கல்லூரி எதிரே உள்ள பொருட்காட்சி திடல்.
  2. திருநெல்வேலி சாலையில் ராயல் என்பீல்டு ஷோரூம் எதிரே உள்ள சுடலை மாடசாமி கோவில் திடல்.
  3. கன்னியாகுமரி மற்றும் பரமன்குறிச்சி சாலையில் தெப்பக்குளம் ரவுண்டானா.


சூரஷம்ஹார விழா பாதுகாப்பு:-

  1. சூரஷம்ஹார விழா காண வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க கடற்கரை பகுதிகளில் பாக்ஸ் அமைப்பில் கம்புகள் கட்டப்பட்டுள்ளது.
  2. கடற்கரை ஓரங்களில் நீராட வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கென தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் அமர்த்தப்பட்டும், கடலில் ஆழமாக சென்று நீராடுவதை தவிர்க்க மிதவை பந்துகள் (Vaoyancy)  மூலமாக எல்லை கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடலோர காவல் குழுமத்தின் மூலம் படகுகள் மூலம் ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  3. குற்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் 115 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோவில் சுற்று வட்டாரங்கள், நகர முக்கிய பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும், டிரோன் கேமராக்கள் மற்றும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாகவும் தீவிர கண்காணிப்புபணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


வாகனங்களில் வரும் பக்தர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தம் செய்தும், அவர்கள் காட்டும் வழிமுறைகளை கடைபிடித்தும், மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad