திருச்செந்தூர் திருக்கோயில் கந்த சஷ்டி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர் பாபு ஆய்வு செய்தார்கள்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 27 October 2022

திருச்செந்தூர் திருக்கோயில் கந்த சஷ்டி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர் பாபு ஆய்வு செய்தார்கள்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகின்ற 30.ஆம் தேதி சூரசம்ஹாரமும், 31ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவதை கருத்தில் கொண்டு திருக்கோயில் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  கடந்த 21ஆம் தேதிஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து நேற்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்  அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திருச்செந்தூருக்கு வருகை தந்து  கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள், கழிவறைகள் மற்றும் குளியலறைகள், குடிநீர் வசதி, மருத்துவ மையங்கள், மின்சார வசதி, பாதுகாப்பு வசதிகள், பக்தர்களுக்கான வரிசை முறை,  மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தற்காலிக கூடாரங்களில் தங்கி விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்களிடம் திருக்கோயில் சார்பாக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். 

 

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.கண்ணன்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  கி..செந்தில் ராஜ், , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்,  கூடுதல் ஆணையர் ந.திருமகள், அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன்  உறுப்பினர்கள், இணை ஆணையர் / செயல் அலுவலர்  ம.அன்புமணி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad