திருச்செந்தூர் கந்த சஷ்டிவில் விஜபி பாஸ் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கூடுதல் பொறுப்பு அதிகாரி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 October 2022

திருச்செந்தூர் கந்த சஷ்டிவில் விஜபி பாஸ் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கூடுதல் பொறுப்பு அதிகாரி.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது விஜபி பாஸ் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கூடுதல் பொறுப்பு அதிகாரி- நடவடிக்கை எடுக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில் கந்த சஷ்டி விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கோவில் அதிகாரி அன்புமணி தன் செல்வாக்கை பயன்படுத்தி கந்த சஷ்டி விஸ்வரூப தரிசனத்திற்கு 5000 ரூபாயும் அபிஷேகத்திற்கு 3000 ரூபாயும் விஐபி தரிசனத்திற்கு 800 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். 

தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பொதுமக்கள் எந்த விதமான சிரமமின்றி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் கோவிலில் கூடுதல் பொறுப்பு வைக்கும் அதிகாரி அன்புமணி அனைத்துமே விற்பனை செய்து வருகிறார் அதுபோல சூரசம்ஹாரம் நடைபெறும் விஐபி பாஸ் விற்பனை செய்யப்படுகிறது இது தமிழக அரசுக்கு அவ பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் பொறுப்பு வைக்கும் அன்புமணி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஆகையால் உடனடியாக தமிழக அரசும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலைத்துறை ஆணையர் குமரகுருப நாதன் ஆகிய உடனடியாக அன்புமணி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டாகவே உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad