காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்செந்தூரில் பாஜக சார்பில் மரியாதை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 2 October 2022

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்செந்தூரில் பாஜக சார்பில் மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு திருச்செந்தூர் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


பின்னர்  காமராஜரின் நினைவு நாளையொட்டி நகராட்சி எதிரில் உள்ள காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில்  நகர தலைவர் நவமணிகண்டன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் கரண் கலந்துகொண்டு மாலை அணிவித்தார், நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் மீனாக்ஷி, நகர இளைஞர் அணி தலைவர் மணிகண்டன், ஒன்றிய துணைத் தலைவர் ஸ்டீபன் லோபோ, நகர செயலாளர் செந்தில்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் மகாராஜன்,நகர துணைத்தலைவி செல்வி, கிளைத் தலைவர் அழகு சுந்தர், கலைச்செல்வி, மனோகரன்,ஜெயக்கொடி, ஆறுமுகம்,புஸ்பலீலா,பத்மா, ஆழ்வார், செல்வன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பாஜக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad