குலசை முத்தாரம்மன் கோயிலில் நூல் அறிமுக விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 2 October 2022

குலசை முத்தாரம்மன் கோயிலில் நூல் அறிமுக விழா.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, ஆலய கலையரங்கில், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அய்கோ எழுதிய 'குலம் காக்கும் தெய்வங்கள்'என்ற குல தெய்வங்களின் வரலாற்று நூல் அறிமுக விழா நடந்தது. 


விழாவிற்கு தாண்டவன் காடு சந்திரசேகர் தலைமை வகித்தார். பாரத திருமுருகன் திருச்சபை தலைவர் மோகனசுந்தரம், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பிச்சி விளை சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி சமூக ஆர்வலர் குணசீலன் வரவேற்றார்.


நூலை அறங்காவல் குழு முன்னாள் தலைவர் கண்ணன் வழங்க, கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சி அமைப்பாளர் அழகிய நம்பி,  பைந்தமிழ் கலாச்சார பயிலக அமைப்பாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் நூலை அறிமுகப்படுத்தி பேசினர். 


விழாவில், தனராஜ், தர்மராஜ் பெருமாள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் அய்கோ ஏற்புரை நிகழ்த்தினார். சிவலூர் ராஜா நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad