திருச்செந்தூரில் நரேந்திர மோடி 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 September 2022

திருச்செந்தூரில் நரேந்திர மோடி 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதினம் மண்டபத்தில் வைத்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தமிழ்நாடு இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


மேலும் கண் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி தேவைப்படுவோர் என 100 பேருக்கு மேல் கண் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு பாரதீய ஜனதா கட்சி மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் தலைமை தாங்கினார்.


சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில தலைவர்.உமா ரதிராஜன்,  மாவட்ட பொதுச் செயலாளர் ஆதித்தன், நகர தலைவர்  நவமணிகண்டன், செந்தில்குமார் நகர பொதுச்செயலாளர், ஐயப்பன் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர், ஜெய ஆனந்த் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர், நகர பொதுச்செயலாளர் மீனாட்சி, நகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், கல்வியாளர்களின் நகரத் தலைவர் மகாராஜன்,உள்ளாட்சி பிரிவு கிளை தலைவர் சரஸ்வதி, மகளிர் அணி மாவட்ட தலைவர் தேன்மொழி, மாவட்டத் துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பர்வத வர்த்தினி,நகரத் தலைவர் மகளிர் அணி திலகரதி,மாவட்ட செயலாளர் மகளிர் அணி தங்க ரதி, ஒன்றிய துணைத் தலைவர் வசந்தி, மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த முகாமில் திருச்செந்தூர் சுற்றியுள்ள பகுதி மக்கள் 100க்கும் மேற்கொண்டார் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad