காந்தி ஜெயந்தியில் கதர் அங்காடி தீபாவளி விற்பனையை ஆட்சியர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 3 October 2022

காந்தி ஜெயந்தியில் கதர் அங்காடி தீபாவளி விற்பனையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். 
பின்னர் காதி கிராப்ட் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தது பேசுகையில் "மகாத்மா காந்தி 154ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து காதி கிராப்டில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு ரூபாய் 80 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 50 லட்சம் கதர் துணிகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த ஆண்டு 90 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கதர் ஆடைகள் பயன்படுத்துதல் உடலுக்கு  நல்லது.ஆகவே பாரம்பரிய கதர் ஆடையை பயன்படுத்தி இந்த வருடம் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம் "என்றார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில்  நாலாம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு  வரும் சுமார் 10 லட்சம் பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் சிறப்பான காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும், பக்தர்களுக்கு சுகாதார, மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறினார். இந் நிகழ்வில் வட்டாட்சியர் செல்வக்குமார், காதி கிராப்ட் பாலசுப்ரமணியம் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடன் இருத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad