கந்த சஷ்டியில் திருச்செந்தூா் கோயில் உள்பிராகாரத்தில் பக்தா்கள் தங்க அனுமதியில்லை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 18 October 2022

கந்த சஷ்டியில் திருச்செந்தூா் கோயில் உள்பிராகாரத்தில் பக்தா்கள் தங்க அனுமதியில்லை!

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பிராகாரத்தில் பக்தா்கள் தங்க அனுமதியில்லை என, கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) அன்புமணி தெரிவித்துள்ளார்.


இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலின் கந்த சஷ்டி திருவிழாவில் 5 லட்சம் பக்தா்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதனிடையே, கடந்த மாதம் 28-ந் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி முறையில் இக்கோயிலில் ரூ. 300 கோடியில் பெருந்திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அதனால், பக்தா்களின் பாதுகாப்பு, சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு கோயில் உள்பிராகாரத்தில் பக்தா்கள் தங்க அனுமதி கிடையாது.


அதனால், வெளி வளாகத்தில் கந்த சஷ்டி திருவிழாவுக்கு விரதமிருக்கும் பக்தா்கள் தங்குவதற்கு வசந்த மண்டபம், வேலவன் விடுதி உள்பட 12 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், கோயில் வளாகத்தில் 7 இடங்களில் 237 கழிப்பறைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தா்களுக்காக 21 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வைக்கப்படும். மேலும், கோயில் வளாகத்தில் 26 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad